moving_rail_002சுவிட்சர்லாந்து நாட்டில் புறப்பட்ட ரயிலில் ஏற முயற்சித்த வாலிபர் ஒருவர் கால் இடறி தண்டவாளத்தில் விழுந்ததை தொடர்ந்து ரயில் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள லவ்சென் நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் நேற்று பிற்பகல் நேரத்தில் சென்றுள்ளார்.

சுவிஸின் Perron நகருக்கு செல்லும் ரயிலுக்காக அவர் அவசர அவசரமாக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால், வாலிபர் ஏற வேண்டிய ரயில் முன்னதாகவே புறப்பட்டு அவரை நோக்கி வந்துக்கொண்டு இருந்துள்ளது.

எனினும், ரயிலை பிடிக்க அவர் ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நபரின் கால் இடறியதில், அவர் தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

விழுந்து எழுவதற்குள் அவரை நோக்கி வந்துக்கொண்டுருந்த ரயில் அவர் மீது ஏறிச்சென்றுள்ளது. ரயிலையும் உடனடியாக நிறுத்த முடியவில்லை.

இந்த விபத்தில் உடல் நசுங்கிய அந்த நபர் அதே இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

நபரின் அடையாளங்கள் தெரியாததால், அவர் எந்த நகரை சேர்ந்தவர் எங்கு தங்கியுள்ளார் என்ற தகவல்களை பொலிசார் சேகரிக்க முடியவில்லை.

இந்த விபத்து தொடர்பாக உறுதியான காரணம் தெரியவராததால் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.