media- (1)கொழும்பு பல்கலைக்கழக கலைப்பிரிவின் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறிக்கு இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 150இற்கும் மேற்பட்ட சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான அனுமதியும் ஆரம்ப நிகழ்வும் அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக கலைப் பிரிவு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியின் ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் சமந்த ஹேரத் கலந்து கொண்டு மங்கள விளக்கெற்றி பாடநெறியினை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் அதிகளாக பேராசிரியர்களான அஜந்த ஹப்புராச்சி,கமல் வேலபொட, ஜே.பீ.திசாநாயக்க ,விரிவரையாளர் எஸ்.விஸ்வநாதன் உட்பட ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட சுமார் 150ற்க்கும் மேற்பட்ட சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த ஊடகவியல் டிப்ளோமா பாடநெறியினை மேற்கொள்வதற்கான பல்கலைக்கழக அனுமதியினை, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைரூஸ் மற்றும் இரு தமிழ் மாணவிகளும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.