ஆசி­ரி­யை­க­ளுடன் மாண­வர்கள் கைகு­லுக்கும் வழக்­கத்­தி­லி­ருந்து முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு விதி விலக்­க­ளிப்­ப­தற்கு சுவிட்­ஸர்­லாந்து நக­ர­மொன்­றி­லுள்ள கல்வி அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

சுவிட்­ஸர்­லாந்தில் ஆசி­ரி­யர்­க­ளுடன் மாண­வர்கள் கைகு­லுக்கி மரி­யாதை தெரி­விப்­பது வழக்­க­மாக உள்­ளது. ஆனால், பெண்­க­ளான ஆசி­ரி­யை­க­ளுடன் தாம் கைகு­லுக்க வேண்­டி­யி­ருப்­பது தமது மத வழக்­கங்­க­ளுக்கு முர­ணா­னது என முஸ்லிம் மாண­வர்கள் இருவர் முறைப்­பாடு செய்­தனர்.

handshakeஇதை­ய­டுத்து, ஆசி­ரி­யை­க­ளுடன் ஆண் மாண­வர்கள் கைகு­லுக்­கு­வ­தி­லி­ருந்து முஸ்லிம் மாண­வர்­க­ளுக்கு விதி­வி­லக்கு அளிப்­ப­தற்கு பாசெல் லான்ட்செவ்ட் பிராந்­தி­யத்தின் தேர்வில் எனும் நக­ரி­லுள்ள கல்வி அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இத்­தீர்­மானம் சுவிட்­ஸர்­லாந்தில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சுவிட்­ஸர்­லாந்தின் விஞ்­ஞானம், கல்வி, கலா­சார விவ­கா­ரங்­க­ளுக்­கான நாடா­ளு­மன்ற ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரான பீலிக்ஸ் மியூரே இது தொடர்­பாக கூறு­கையில், “கைகு­லுக்­கு­வது எமது கலா­சா­ரத்தின் ஒரு பகு­தி­யாகும்.

இது மரி­யா­தை­யையும் நற்­பண்­பையும் வெளிப்­ப­டுத்­து­கி­றது” எனத் தெரி­வித்­துள்ளார். சுவிஸ் மாகா­ணங்­களின் கல்வி அமைச்­சர்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கிறிஸ்டோப் எய்மன் கருத்துத் தெரி­விக்­கையில், விதி­மு­றைகள் தொடர்­பான இத்­த­கைய விதி­வி­லக்­குகள் தீர்­வாக அமைய மாட்­டாது.

அரச சேவை­யி­லுள்ள எமது பெண்கள், ஆண்­க­ளை­விட வித்­தி­யா­ச­மான முறையில் நடத்­தப்­ப­டு­வதை நாம் சகித்­துக்­கொள்ள முடி­யாது” எனத் தெரி­வித்­துள்ளார்.

தேர்வில் நகர அதிகாரிகளின் தீர்மானத்தை நிராகரிப்பதற்கு பாசெல் – லான்ட்செவ்ட் பிராந்திய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. எனினும் அவர்கள் இது தொடர்பில் உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.swiss