bassயாழில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் நிலமை மிகவும் பரிதாபநிலையை அடைந்துள்ளது அரசாங்க சட்ட விதிகளுக்கு மாறாக இ,போ.ச வின் சேவை அதிகரிப்பால் அரச தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களுக்கிடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன இதற்கான தீர்வினை அரசாங்கமோ அமைச்சுகளோ இன்னமும் மேற்கொள்ள வில்லை மாறாக தனியார் உரிமையாளர்கள் சாரதி நடத்துனர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆநீதிகள் கொஞ்சமல்ல.

மட்டற்ற சேவையை இ,போ,ச மேற்கொள்வதனால் போட்டிபோட்டு ஓடும் நிலையில் காவல்துறையினரால் தனியார் பேருந்து மட்டுமே வழி மறிக்கப்பட்டு வழக்கு தொடரப்படுகிறது கடந்த 13/04/2016 அன்று முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கி புறப்பட்ட தனியார் அரச பேருந்து சாரதி நடத்துனர்களின் முறுகல் நிலையை தொடர்ந்து இ,போ,ச சாரதி தன் பேருந்தின் கண்ணாடியை தானே உடைத்துவிட்டு மருத்துவமனையில் செனீறு தன்னையும் பேருந்தையும் தாக்கியதாக பொய்ப்புகார் செய்ததன் பின் தனியார் பேருந்து சாரதி நடத்துனர் கைதுசெய்யப்பட்டனர் அத்தோடு நாடளாவிய ரீதியில் ஏதோ ஒரு வழித்தடத்தில் சேவையாற்றும் தனியார் பேருந்துகளுக்கு வேறு மாவட்டங்களுக்கு சேவையை மேற் கொள்ளும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் தற்காலிக வழிஅனுமதிப்பத்திரம் யாழ்ப்பாண மாவட்ட பேருந்துகளுக்கு மட்டும் மறுக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக யாழ்ப்பாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் யாழ்ப்பாண அரச அதிபருடன் பேசியும் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை ஆனால் அரச அதிபர் இதற்கான அனுமதியை வழங்ச்சொல்லியும் இன்றுவரை இவ் அனுமதியை அலுவலகத்தில் பணிபுரியும் நபரே தடைசெய்து வைத்திருப்பதாகவும் அவரின் பெயர் விபரங்களை ஓரிரு தினங்களில் எமது செய்தி நிறுவனத்துக்கு வழங்குவதாகவும் இது தொடர்பாக மேலதிகாரிகள் கவனம் செலுத்த தவறியதாகவும் சில உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்