இலங்கையின் முதலாவது வாகனத்திலிருந்தவாறே (Drive Through) டோனட் (Donut) கொள்வனவு செய்யக்கூடிய வாடிக்கையாளர் நிலையம், கொழும்பு 07 காசல் வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோநட் நிறுவனத்தின் இந்த காரியாலயத்தில் அனைத்து விதமான டோனட் வகைகளயும் வாடிக்கையாளர்கள் தமது வாகனத்தில் இருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும். ஹொட் பிங்க் லவ், சுவீட் சினமன் மற்றும் ராஸ்பரி டிலைட் போன்ற கோநட் நிறுவனத்துக்கே உரித்தான விசேட வகைகளும் இந்த புதிய நிலையத்தில் விற்பனைக்குள்ளன.

ஆசியான் (Asean) நாடுகளில் காணப்படும் மூன்றாவது வாகனத்திலிருந்தவாறே கொள்வனவு செய்யக்கூடிய டோனட் விற்பனை நிலையம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைமுறையிலுள்ள நிறுவனத்தின் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளான பத்தரமுல்ல, நுகேகொடை மற்றும் தெஹிவளை போன்ற பிரதேசங்களுக்கான விநியோக சேவைக்கு மேலதிகமாக இந்த புதிய நிலையத்தின் செயற்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் மேலும் வசதியாக தமக்கு விரும்பிய டோனட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

வேலைப்பழு மிக்க தாயொருவர் தனது பிள்ளைகளுக்கு இனிப்பான அன்பளிப்பொன்றை வழங்க விரும்பின், அதிகளவு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தக பிரமுகர்கள் தமக்கு விரும்பியவர்களை ஏற்றச் செல்லும் போது வழங்க அல்லது இனிமையான வேளையை எதிர்பார்க்கும் மாணவர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த கோநட்டின் டோனட் புதிய விற்பனை நிலையம் பெரும் வசதியாக அமையும்.

இந்த நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போது கோநட் நிறுவனத்தின் மற்றுமொரு புதிய டோனட் வகையாக சுகர் ரஷ் டோனட் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்த புதிய நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு கோநட் நிறுவனத்தின் தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லலின் ஜினசேன கருத்து தெரிவிக்கையில், எமது வர்த்தக நடவடிக்கையில் நாம் மேற்கொண்டுள்ள மற்றுமொரு மைல்கல் நடவடிக்கையாக இந்த நிலையத்தை குறிப்பிட முடியும்.

உணவு சேவைகள் துறையில் நாம் உறுதியாக கால்தடம் பதித்துள்ள நிலையில், நாம் தயாரிக்கும் பொருட்களின் தரம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதன் காரணமாகவே நாம் இந்த புதிய நிலையத்தை திறப்பது குறித்த தீர்மானித்திருந்தோம்.

இந்த நிலையத்தின் மூலம் தற்போது எமது வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட டோனட்களை வழங்க முடிந்துள்ளது என்றார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோநட் நிறுவனம் தாபிக்கப்பட்டதிலிருந்து, தமது புதிய டோனட் அறிமுகங்களின் மூலமாகவும், இனிப்பு மற்றும் உறைப்பு சுவைகளில் அமைந்த டோனட்களின் மூலமாகவும், சிறந்ததொரு வாடிக்கையாளர் வலையமைப்பை கட்டியெழுப்ப முடிந்தது.

இந்த புதிய நிலையத்தின் மூலம் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் எதிர்பாராத உயர்ந்த சேவைகளை வழங்கல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற நிறுவனத்தின் குறிக்கோளை நிறைவேற்றப்பட்டுள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது.