RaymondCrash21சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் நடந்து சென்ற நால்வர் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதிய விபத்தில் அவர்களுடன் சென்ற குழந்தை தற்போது உயிருக்கு போராடி வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Spiez என்ற நகரில் நேற்று மாலை 5 மணியளவில் 4 வாலிபர்கள் சாலை ஓரமாக நடந்து சென்றுள்ளனர்.

அவர்களுடன் 3 வயதான குழந்தை ஒன்றும் நடந்து சென்றுள்ளது. அப்போது, சாலையி அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென சாலையில் இருந்து விலகி நால்வர் மீதும் மோதியுள்ளது.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் குழந்தை உள்பட நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டு நால்வரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர்.

வாலிபர்கள் நால்வரும் தற்போது சுயநினைவுக்கு திரும்பியுள்ளனர். ஆனால், அவர்களுடன் சென்ற குழந்தை மட்டும் இன்னும் ஆபாத்தான நிலையை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டிய ஓட்டுனருக்கு இந்த விபத்தில் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எனினும், கார் எதனால் கட்டுப்பாட்டை இழந்து வாலிபர்கள் மீது மோதியது என தெரியவரவில்லை.

கார் ஓட்டுனரை கைது செய்துள்ள பேர்ன் நகர பொலிசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.