3381716546-609x330சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பகுதியில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட விவாதம் கத்திகுத்தில் முடிவடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவா பகுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர் நண்பர்கள் இருவர். இவர்கள் இருவரும் அடிக்கடி விவாதத்தில் ஏற்பட்டு வந்துள்ளது அக்கம்பக்கத்தினருக்கு பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. பல சமயங்களில் நள்ளிரவு தாண்டியும் உரத்த குரலில் ஒருவருக்கொருவர் விவாதம் செய்து வந்துள்ளனர். இதனால் பல முறை அக்கம்பக்கத்தினர் இந்த நண்பர்கள் இருவரையும் எச்சரிக்கை செய்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் வழமைபோல ஒரு விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கத் துவங்கியுள்ளனர். வெள்ளியன்று துவங்கிய இவர்களது வாக்குவாதம் சனிக்கிழமை வரை தொடர்ந்துள்ளது. இதனிடையே நண்பர்களில் ஒருவர் ஆத்திரத்தால் கத்தியை எடுத்து தமது நண்பரை சரமாரியாக பல முறை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத நண்பர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார். இதனால் பீதியடைந்த அந்த நபர் உடனடியாக அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பொதுமக்கள். தற்போது அபாயகட்டத்தை கடந்துள்ள அந்த நபர், நடந்த நிகழ்வுகளை பொலிசாருக்கு கூடிய விரைவில் தெரியப்படுத்துவார் என கூறப்படுகிறது. மேலும் தலைமறைவான அந்த இளைஞனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்