பருத்தித்துறை கிராமக் கோட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து திருட்டுப் போன 50 பவுண் தங்க நகைகள் 10 நாள்களின் பின்னர் கடந்த 9 ஆம் திகதி மீண்டும் கிடைத்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
பருத்தித்துறை கிராமக் கோட்டடியைச் சேர்ந்த செ.பாஸ்கரன் என்பவர் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரது வீட்டில் வைத்திருந்த 50 பவுண் தங்க நகைகள் கடந்த வாரம் மாயமாக மறைந்துவிட்டன.

இது தொடர்பாகப் பருத்தித்துறை பொலிஸில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.வெளிநாட்டில் இருந்து வந்தவர் பொருள்களை இழந்த நிலையில் மீண்டும் தன் பணிக்கு வெளி நாடு சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி திருட்டுப் போன நகைள் வீட்டின் சமையலறைப் புகைக்கூட்டின் வழியாக அந்த நகைகள் போட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.