கிறிஸ்ட்சர்ச்சில் ஏற்பட்ட பூகம்ப அழிவிற்கு ஒருவாரத்திற்குள் இன்று செவ்வாய், இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மீட்புக் குழுவினர் தங்கள் உபகரணங்களை கீழேவைத்துவிட்டு அஞ்சலி செலுத்தினர். கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன , நாடு முழுவதும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்தன.

அந்த இரண்டு நிமிடத்தில் கிரிஸ்ட் சர்ச் நகரில் கேட்ட ஒரே ஒலி மக்களின் அழுகைக் குரல் மட்டுமே. பிரதமர் ஜான் கீ 20 பேர் புதைந்த்தாக கூறப்படும். சிட்டிஸ் கதீட்ரல் அருகில் நினைவு கூட்டத்தை நடத்தினார்.

பிரதமர், முதல் கட்டமாக 120 மில்லியன் டாலர்களை மானியமாக அறிவித்துள்ளர். பூகம்ப பாதிப்புக்குள்ளாகி, தங்கள் பணிக்கு திரும்ப இயலாதவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இந் நிதி பயன்படுத்தப்படும்.

கிறிஸ்ட்சர்ச்ன் ஆஸ்லிக்கன் பிஷப் விக்டரியா மத்தேயுஸ் கூறியதாவது நூற்றுக்கணக்கானவர்களை பலிகொண்ட இப்பூகம்ப பாதிப்புகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இது ஒரு இருண்ட தருணம் என்றாலும் இதிலிருந்து நாம் மீண்டு வருவோம்.

வாஸிங்டன் நகரில் ஆயிரக்கனக்கானோர் தெருக்களில் இறங்கி அஞ்சலி செலுத்தினர். பாராளுமன்றம் முன்பு பலரும் அழுதநிலையிலிருந்தனர்.