முன்னாள் உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கும் – அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007 ஏப்ரல் 20 ம் திகதி திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்க மாமனார் வீட்டில் சம்மதித்ததைத் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அழகு கெட்டுப் போய்விடும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டர் தளத்தில் எழுதியிருக்கிறார். அதில், சந்தோஷமான செய்தி, ஐஸ்வர்யா ராய் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரொம்ப த்ரில்லிங்காகவும் இருக்கிறது. நான் தாத்தா ஆகப்போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
கர்ப்பம் தொடர்பான செய்தியை ஐஸ்வர்யா ராய் உறுதிபடுத்தவில்லை. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. அவரது கணவர் அபிஷேக் பச்சனை விட ஐஸ் 2 வயது மூத்தவர் என்பது கூடுதல் தகவல்













