தம்புள்ளை இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் அங்குள்ள பாறை ஒன்றில் தலைமோதி பலியாகியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச்சம்பவத்தில் படுகாயமடைந்த பிக்கு தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
நெகம்பவ தம்மென்னாவ ரஜமகா விகாரையின் 22 வயதுடைய இளம்பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்கென தம்புள்ளை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.