ஜப்பானில் அணுஉலை வெடித்ததால் அந்நாட்டில் அணுசக்தி ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை அந்நாட்டில் சுனாமிக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தி 600 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை ஜப்பானின் க்யோடா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வடக்கு ஜப்பானில் உள்ள ஃபுகுமா அணுமின் நிலையத்தில் உள்ள முக்கிய அணுஉலை வெடித்தது. இச்சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ஜப்பான் முழுவதும் அணுசக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கதிர்வீச்சு அபாயம் காரணமாக அணுஉலை அருகில் இருந்த சுமார் 45 ஆயிரம் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணுஉலை குளிரூட்டப்படவில்லை. இதனால் அணுஉலையின் வெப்பம் அதிகரித்து வெடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் நாடோ கன், விமானம் மூலம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டார்.