0சுவிஸ் மாநகர சபை கூட்டத்தில் சேலை அணிந்து வந்த தமிழ்பெண் திருமதி தர்ஷிகா !!

தமிழர் பண்பாட்டை மறந்து வாழ்வோர் மத்தியில் இவர் தமிழர் பண்பாட்டு உடையில் வந்து எமது பாரம்பரியத்தை வெளிக்காட்டியுள்ளார்..

சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டார்.

அப்போது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், இன்றிலிருந்து எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் முடிந்த நல்ல சேவைகளை செய்வேன் என கூற கடமைப்பட்டுள்ளேன்.

சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், படிப்பு, பிள்ளைகள், குடும்பம் என இந்த விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து பாடுபடுவேன் என்பதை கூற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.