1சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் பெறுவதற்காக தனது முன்னாள் கணவரின் சகோதரரை பெண் ஒருவர் ரகசியமாக திருமணம் செய்துள்ளது தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்று வசித்து வந்துள்ளார்.

திருமணம் ஆன சில வருடங்களுக்கு பிறகு சுவிஸில் உள்ள Freiburg நகரில் குடியேறியுள்ளனர். பெண்ணிற்கு குடியிருப்பு அனுமதி கிடைத்துள்ளது.

பின்னர், சில காரணங்களுக்காக கணவனை விவாகரத்து செய்த பெண் முன்னாள் கணவரின் உடன்பிறந்த சகோதரரை ரகசிய திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணம் இரு சகோதரர்களுக்கும் தெரியாததால் மூவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் கடந்தாண்டு யூலை மாதம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த விசாரணையில் இறுதி வாதம் இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது அனைத்து குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

‘எனது முன்னாள் கணவரின் சகோதரரை நான் காதலித்து திருமணம் செய்யவில்லை. இதுவரை நாங்கள் இல்லற உறவில் கூட ஈடுப்படவில்லை.

சுவிஸில் அவர் புகலிடம் பெறுவதற்கு உதவி வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவரை ரகசிய திருமணம் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது உண்மை வெளியாகியுள்ள நிலையில், புகலிடத்திற்காக சட்டவிரோதமாக திருமணம் செய்துக்கொண்ட பெண் தினமும் 50 பிராங்க் அபாரதம் செலுத்தி வர வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், தற்போது குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இரண்டாவது கணவர் விரைவில் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.