suசிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்தின் புனரமைப்பு வேலைகள் இதற்கான புதிய நிர்வாக குழுவினரால்
முன்னெடுக்கப்பட்டு அதன் மண்டபம், கிணறு போன்ற வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதத்துகுள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளனர் புதிய நிர்வாகக்குழுவினர் என்ற நல்ல செய்தியைக் கூறிக்கொண்டு

இவர்கள் ஆற்றிய ஆற்றவிருக்கின்ற பணிக்கு ஊர்மக்கள் புலத்தில் வாழ்கின்ற எம் உறவுகளின் சார்பில் சிறப்பான பாராட்டை கூறி நிற்கும் இவ்வேளையில் இன்னும் சிறப்புற்று இணைந்து
பணி புரியவேண்டும் என்று கேட்டுக்கொண்டு கீழ் இது எப்படி சாத்தியமானது இதன் கட்டுமானம் என்பது எப்படி நடைபெற்றது,பெறப்போகின்றது என்பதை அறிய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் அல்லவா ?

அதைக்கீழ் காண்போம்
எமது ஊர்வாழ் உறவுகள் அறிந்த தகவல் இது ஆனாலும் புலம்வாழ் உறவுகளுக்கு அறியத்தரும் விடை யம்

இதற்கான குழு ஒன்று இணைக்கப்பட்டு அது மானகர சபையில் அங்கீகரிக்கப்பட்டு அதன்பின்
இதற்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பமானது
இதற்கு முதல் கட்டமாக புத்துார் மானகரசபை ஒருலட்சம் தருவதாக கைச்சாத்திட்டுள்ளது அதன்பின்
நீங்கள் வேலைகளை ஆரம்பித்து செய்து காட்டுங்கள் உங்களுக்கு நாங்கள் சொன்னது போல் நிதிதருவோம் என்றார்கள்

அதனால்இதற்கான முதற்கட்டமாக எமது ஊரில் நிதி சேர்க்கப்பட்டது அதில் தந்தவர்களின் நிதியை வைத்துக்கொண்டு புலத்தில் எமது ஊர் நலம் விரும்பிகளிடம் இருந்து வந்த நிதி வலுச்சேர்க
இதுவரை நடைபெற்ற வேலைகள் முடிந்துள்ளது.

இதன் கணக்கு விபரங்கள் எமது ஊர் இணையத்தில் இணைக்கப்படும் இதற்கான மேலதிக நிதி இந்த மயானப்பாவனையாளர்களாகிய எமது உறவுகள் இணைந்து தருவீர்கள் என்ற நம்பிக்கையில் முதலில் செயல் படுத்தல் பின் உங்களுடன் இணைய மூலம் பகிர்தல் என்ற நிலையால் இதை எமது ஊர் உறவுகளுக்கு முன் கூட்டி அறிவிக்கப் படவில்லை அது மட்டுமல்ல
எமது மயானத்துக்கான காணி பெரும்தொகையாக இருந்தது இங்கே வாழ்ந்த உங்களுக்குத்தெரியும்
அது இப்போது கள்ள உறுதிபோட்டு வித்து வித்து குறுகியுள்ளது இந்த மயானத்தையோ அல்லது இதற்கான மதில் கட்ட லையோ நாங்கள் காலம் தாழ்த்தினால் இங்கே இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலையும்வரும் அதனால் ஆரம்பித்த வேலையுடன் மயானத்தில் மதில்கட்ட எமது இந்த மயானப்பாவனையாளர்களின் உறவுகள் இதற்கான உதவியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது ஊரின் சிறப்பில் அக்கறை உள்ளவர்கள் எங்கள் உறவுகள் எங்கள் தேவை அறிந்து எம்மைச் செயலாற்ற வைத்தவர்கள் நீங்கள் அதனால் உங்கள் ஒத்துழைப்பில் தடை இருக்காது என்பது எமக்குத்தெரியும் இதற்காக எவ்வளவு நிதி முடியும் என்ற சரியான தகவலுடன் மீண்டும் இணைவோம்
ஊரின் நல் வளம் கருதும் உங்கள் கரம் உயர நமது ஊர் சிறக்கும் என்று புரிந்த உங்கள் எண்ணத்துடன் நாமும் பணிசெய்ய வந்துள்ளோம்

கணக்கு விபரங்கள் அனைத்தும் கூடிய விரைவில் இந்த இணையத்தில் பார்வைக்கு வரும் என்று கூறி நிற்கிறோம்;

உங்கள் பார்வைக்காய் சில நிழல் படங்கள் 

su

su1

 

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments