piஆறு வயது சிறுவன் ஒருவன் கடவுளின் மறுபிறவியாக பார்க்கப்படும் ஆச்சரிய நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் கமலேஷ்.

இவரின் மகனான பிரன்சு (6) பிறக்கும் போதே அவனுக்கு ஏற்பட்ட விசித்திர நோய் தாக்கத்தின் காரணமாக தலை பெரியதாகவும், குறுகிய கண்களுடன் வாழ்ந்து வருகிறான்.

அந்த சிறுவனால் சரியாக நிமிர்ந்து நடக்க முடியாது. சிறுவன் பிரன்சுவின் உருவத்தை வைத்து அவர் இந்து கடவுளான விநாயகரின் மறுபிறவி என மக்கள் அவனை வணங்கி வருகிறார்கள்

இது பற்றி பிரான்சுவின் தந்தை கமலேஷ் கூறுகையில், பிறக்கும் போதே பிரான்சு இப்படி தான் பிறந்தான்.

அவன் பிறந்த பின்னர் நாங்கள் அவனை பல மருத்துவர்களிடம் காண்பித்தோம். ஆனாலும் அவன் உருவம் எல்லாரும் போல சாதாரணமாக ஆகவில்லை.

அவனை சிறு வயதிலிருந்தே நான் உட்பட இந்த ஊரில் இருப்பவர்கள் விநாயக கடவுளின் மறுபிறவியாக தான் பார்க்கிறோம்.

அவனும் எல்லாரும் போல தினமும் பள்ளிகூடத்திற்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளான் மற்றும் என் மகன் உடல் அமைப்பு கூட விநாயக கடவுள் போல தான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.