ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் சக்தி கொண்டதாக இருந்தது. உலகில் இதுவரை ஏற்பட்ட பெரிய பூகம்பங்களில் இதுவும் ஒன்றாகும். பூகம்பத்தால் பூமிக்கு வெளியே ஏற்பட்ட பாதிப்புகளை கட்டிடங்கள் இடிந்தது, சுனாமி தாக்குதல் போன்றவற்றால் உணர்ந்து இருக்கிறோம்.
 
ஆனால் பூமிக்கு உள்ளேயும் பல்வேறு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக புவியியல் விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். ஜப்பான், நியூசிலாந்து, அலாஸ்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிக்கும் பசிபிக் கடலில் பெரும் பகுதியும் பூமியின் டெக்டானிக் தட்டு பகுதியில் அமைந்துள்ளன.
 
ஜப்பான் பூகம்பத்தால் இந்த பகுதி பூமி அச்சில் இருந்து 18 மீட்டர் தூரம் விலகி விட்டதாக புவியியல் விஞ்ஞானி சென்சூ சென் கூறியுள்ளார். பூகம்பம் டெக்டானிக் தட்டில் 400 கிலோ மீட்டர் நீளம் 160 கிலோ மீட்டர் அகலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
 
ஜப்பான் தலைநகரம் டோக்கியோ மற்றும் ஹோன்சு மாகாணத்தை உள்ளடக்கிய பிரதான தீவு 8 அடி விலகி விட்டதாக அமெரிக்க புவியியல் விஞ்ஞானி கென்னத் ஹண்ட் கூறியுள்ளார். இந்த பூகம்பம் பூமி நில பகுதிக்குள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.