சிறுப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சற்று முன்னர்மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி (09.04.2017 ஞாயிறு பிற்பகல் 6.30 மணியளவில்) மயக்கமுற்ற நிலையில் கோப்பாய் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்.
.
அவர் யாரெனத் தெரியவில்லை. அவரின் பின்னால் நான் பயணித்துக் கொண்டிருந்தேன். திடீரென வீதிக்குக் குறுக்கே கன்றுக்குட்டி ஒன்று பாய்ந்து ஓடியதால் – கன்றுக்குட்டியுடன் நேரடியாக மோதுண்டதால்இந்த விபத்து நேர்ந்தது. அதில் உடனடியாக கூடியவர்கள் அவர் யாரென அறிவதற்கு தொலைபேசியை எடுத்து முயன்று பார்த்தனர். இரண்டு தொலைபேசிகளை அவர் வைத்திருக்கின்றார். அது பூட்டுச் செய்யப்பட்ட (லொக்) நிலையில் இருந்ததால் மேலதிக தகவல்கள் பெறமுடியவில்லை. ஹெல்மெட் போட்டிருந்தார். இருப்பினும் தலையில் இருந்து இரத்தக் கசிவு தென்பட்டது.
.
கறுப்பு நிற Hero Passion மோட்டார் சைக்கிளில் வந்த அவருடைய மோட்டார் சைக்கிள் சிறுப்பிட்டி எரிபொருள் நிலையத்தில் விடப்பட்டுள்ளது.

உரியவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த தகவலைப் பிரசுரிக்கின்றேன்.

.பதிவில் புதிய சேர்க்கை
.
விபத்திற்குள்ளானவர் சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் வயது 40 ஸ்கந்த வீதி உடுப்பிட்டியைச் சேர்ந்தவர் என பத்திரிகையாளர் நிருஜன் முகநூல் ஊடாக அறியத்தந்துள்ளார்.

Merken