சுவிட்சர்லாந்து நாட்டில் மாட்டிறைச்சி மற்றும் பிற விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்ய விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் சராசரியாக ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51.4 கிலோ இறைச்சியை உணவாக எடுத்து வருகின்றனர்.

கோழி, வான்கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை அடுத்து ஆட்டுக்கறியை சுவிஸ் குடிமக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதற்கு அடுத்ததாக மாட்டிறைச்சியையும், இறுதியாக மீன் மற்றும் பன்றி இறைச்சியை மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

எனினும், சுவிஸில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் அனைத்தும் சுவிட்சர்லாந்து நாட்டிலேயே உருவாகிறதா? அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி/கடத்தல் செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் இறைச்சிகள் அடிக்கடி பொலிசாரின் சோதனையில் சிக்குகிறது. இதனால் இறைச்சியின் தரத்தில் சந்தேகம் ஏற்படுகிறது.

எனவே, இதனை உறுதி செய்ய அரசு ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வரவுள்ளது.

அதாவது, நாடும் முழுவதும் உள்ள இறைச்சி கூடங்களுக்கு வரும் விலங்குகளின் டி.என்.ஏவை சேகரித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு விலங்கின் டி.என்.ஏவை சேகரித்துவிட்டால், அந்த விலங்கு வழியாக பிற விலங்குகளின் பூர்வீகத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

இறைச்சி கூடத்தில் அல்லது இறைச்சி வாங்கிய ஒருவரின் இறைச்சியை டி.என்.ஏ மூலம் பரிசோதனை செய்தால் அது சுவிஸில் உருவான இறைச்சியா? அல்லது வெளிநாட்டில் இருந்து வந்த இறைச்சியா என்பது தெரிந்துவிடும்.

இறைச்சி விற்பனை செய்வதில் அறிமுகமாக உள்ள இந்த புதிய திட்டம் அடுத்தாண்டு முதல் அறிமுகமாக உள்ளது.

மேலும், இத்திட்டம் முதலில் மாட்டிறைச்சியில் பயன்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் அடுத்தடுத்து விலங்கு இறைச்சிகளிலும் இம்முறை பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.