இயற்கையாகவே மஞ்சள் மற்றும் பாலில் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளதால், இது ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொடுக்கிறது.
எனவே 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை 150 மிலி பாலை நன்கு காய்ச்சி அதில் கலந்து வடிகட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் தூள் கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • மஞ்சள் கலந்த பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கள் மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால், அது மார்பகத்தோல், நுரையீரல், புரோஸ்டேட், மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் வளர்ச்சியை தடுத்து, கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைக்கிறது.
  • மஞ்சள் கலந்த பாலை தினமும் குடித்து வந்தால், கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சனையால் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது.
  • மஞ்சள் கலந்த பாலானது, குளிர் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன், சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது