முள்ளங்கியை சாம்பாரில் பயன்படுத்துவதோடு பொரியல் செய்தும் உண்ணலாம். முற்றாத கிழங்குகள் உண்ணத்தகுந்தவை. முற்றியவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதுடன், சுவையும் குறைவாகவே இருக்கும்.சிறுநீர் கழிக்கையில் உண்டாகும் எரிச்சலைத் தீர்க்கும். சிறுநீர் பாதையில் ஏற்படும் கல் இவற்றிற்கு முள்ளங்கிச்சாற்றை தினமும் ஒரு வேளையாக பதினைந்து நாட்கள் குடித்து வர உபாதை நீங்கும்.ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச்சாற்றை சமஅளவு தேனும், கல்உப்பு சிறிதளவும் கலந்து குடித்தால் வறட்டு இருமல், மார்ப்புச்சளி, கரகரப்பு குணமாகும்.

முள்ளங்கி இலைகளை மஞ்சள்காமாலைக்கும் பயன்படுத்தலாம். இலைகளை நசுக்கி சாறெடுத்து  வடிகட்டி ருசிக்கேற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். தினமும் இவற்றை அரைக்கிலோ அளவு கொடுத்து வர வேண்டும். இதில் உடனடி நிவாரணம் கிடைக்கும்.சிவப்புநிற முள்ளங்கியை விட வெள்ளைநிற முள்ளங்கி மருத்துவ குணத்தில் சிறந்தது.முள்ளங்கிக்கிழங்கு மூலநோய், விக்கல், வயிற்றுப்புண், காலரா நோய்களுக்கான சிகிச்சைக்கும் உதவும். முள்ளங்கிச்சாற்றுடன் கேரட் சாறும் சேர்த்துப் பருகினால் அது உடம்பில் உள்ள சளிப்படலத்தை சுத்தம் செய்யும்.