புத்­தூர் மேற்கு கலை­மதி கிரா­மத் தின் சுட­லைப் பிரச்­சி­னை­யைத் திரித் தும் மறைத்­தும் உத­யன் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது என்று குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கி­றார் புதிய ஜன­நா­யக மார்க்­சிச லெனி­னிச கட்­சி­யின் தலை­வர் சி.க.செந்­தி­வேல்.
இது தொடர்­பில் அந்­தக் கட்சி அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக் கப்­பட்­டுள்­ள­தா­வது,
அண்­மைய மாதங்­க­ளா­கப் புத்­தூர் கலை­ம­திக் கிராம மக்­கள் தமது குடி­யி­ருப்­பு­கள் மத்­தி­யில் இருந்து வரும் மயா­னத்தை அகற்­றக்­கோரி பல்­வேறு கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்­கள். அதன் கார­ண­மா­கச் சில நாள்­க­ளுக்கு முன்பு இடம்­பெற்ற பொலி­ஸார் பொது­மக்­க­ளுக்கு இடை­யி­லான முறு­கல் நிலைக்­கும் பதற்­றச் சூழ­லுக்­கும் பொலிஸா­ரின் துப்­பாக்­கிச் சூடே கார­ணம்.
பக்­கச் சார்­பும் பழி­வாங்­கும் நோக்­க­மும் கொண்ட மேற்­படி செயற்­பாட்­டைத் திரித்­தும் மறைத்­தும் யாழ்ப்­பாண ஊட­க­மான உத­யன்  பத்­தி­ரிகை எமது புதிய ஜன­நா­யக மார்க்­சிச லெனினி­சக் கட்சி மீது பழி சுமத்தி செய்தி வெளி­யிட்­ட­து­டன், ஆசி­ரி­ய தலை­யங்­க­மும் எழு­தி­ய­மை­யா­னது விச­னத்­திற்­கும், கண்­ட­னத்துக் கும் உரி­ய­ தா­கும்.
மேற்­படி  கிராம மக்­கள் முன்­வைத்­துள்ள மனி­தா­பி­மா­னக் கோரிக்­கை­யின் நியா­யத்­தைக் கண்டுகொள்­ளாது, பிணப் புகை­யை­யும், எரி சாம் பல் தூசி­க­ளை­யும் அந்த மக்­கள் அனு ­ப­விக்க வேண்­டும் என்ற பழை­மை­வாத ஆதிக்க சக்­தி­க­ளுக்கு வக்­கா­லத்து வாங்­கும் வகை­யில் அந்­தப் பத்­தி­ரிகை எழு­தி­யுள்­ள­து­டன், எமது கட்சி பின்­னால் இருந்து தூண்டி விட்­டுள்­ள­தா­க­வும் வக்­கி­ரத்­து­டன் எழுதி இருப்­பது நடு­நி­லைப் பத்­தி­ரிகை என்ற அதன் போலித்­த­னத்­தையே எடுத்­துக் காட்­டு­கி­றது.
நில­வு­டை­மை­யா­லும், சொத்­துை­ட­மை­யா­லும், சாதி ஆதிக்­கத்­தா­லும் ஒடுக்­கப்­பட்டு வந்த கலை­ம­திக் கிராம மக்­கள், கடந்த மூன்று தசாப்தங்­க­ளா­கத் தம்­மைப் பிணைத்­தி­ருந்த அடி­மைச் சங்­கி­லி­களை ஒன்­றன் பின் ஒன்­றாக உடைத்­தெ­றிந்து கொண்டு தமக்­கு­ரிய உரி­மை­களை நிலை­நாட்டி வந்­தி­ருக்­கி­றார்­கள். சமூக அநீ­தி­க­ளுக்கு எதி­ரான அவர்­க­ளின் போராட்ட முன்­னெ­டுப்­பு­க­ளில் எந்த ஒரு தமி­ழர் தரப்பு ஆதிக்­க­வாத கட்­சி­க­ளும் உத­வவோ, பங்­கெ­டுக்­க  வோ முன்­வந்­த­தில்லை.
தமக்­கான நிலம், பொரு­ளா­தா­ரம், கல்வி, சுகா­தா­ரம், சமூ­கப் பயன்­பாடு அனைத்­தை­யும் பழை­மை­வாத ஆதிக்­கங்­க­ளோடு போரா­டியே அந்த மக்­கள் படிப்­ப­டி­யா­கப் பெற்று வந்­துள்­ள­னர்.
அதே வேளை சமூக விரோ­தச் செயல் க­ளையோ அல்­லது அடா­வ­டித்­தன ரவு­டித்­த­னங்­க­ளையோ, வாள்­வெட்­டுக் கலா­சா­ரத்­தையோ கொண்­டி­ருக்­காத சமூக அக்­க­றை­கொண்ட இளந்­தலைமுறை­யி­ன­ரை­யும் மக்­க­ளை­யும் கொண்ட கட்­டுப்­பாடு உடைய கிரா­ம­மா­கவே அந்தக் கிரா மம் இருந்து வரு­கின்­றது. இதற்கு எமது கட்­சி­யின் வழி­காட்­ட­லும் பங்­க­ளிப்­பும் இருந்து வந்­துள்­ளது.
இந்த  நிலை­யி­லேயே அந்­தக் கிரா­மத்­தின் மத்­தி­யி­லி­ருக்­கும் மயா­னத்தை அகற்றி குடி­யி­ருப்­பு­க­ளுக்கு அப்­பால் இருந்­து­வ­ரும் மயா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­மாறு கலை­ம­திக் கிராம மக்­கள் கோரிக்கை வைத்து வரு­கி­றார்­கள். சுகா­தா­ரச் சீர்­கேட்டுக் கும், சூழல் மாச­டை­த­லுக்­கும், குழந்­தை­கள், சிறு­வர்­கள், கர்ப்­பி­ணித் தாய் மார்­கள், முதி­யோர் நோய்த் தாக்­கத்­துக்கு ஆட்­ப­டு­வ­தற்­கும், பிணப்­புகை, சாம்­பல் தூசி­கள் பர­வு­தற்­கும் கார­ண­மாக அமைந்­துள்ள மேற்­படி மயா­னம் அகற்­றப்­பட வேண்­டும் என்­பதே அந்த மக்­க­ளின் உறு­தி­யான நிலைப்­பா­டா­கும்.
கூலி விவ­சா­யி­க­ளும், அன்­றாட தொழி­லா­ளர்­க­ளு­மான கலை­ம­திக் கிராம மக்­க­ளின் மேற்­படி கோரிக்­கை­யில் மனி­தா­பி­மா­ன­மும், நியா­யத்­தன்­மை­யும், மக்­கள் சார்­பும் இருப்­ப­தன் கார­ண­மா­கவே எமது கட்சி அதனை ஆத­ரித்து நிற்­கின்­றது. அதே­போன்று குடா நாட்­டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லும் மக்­கள் குடி­யிருப்­பு­க்கள் மத்­தி­யில் இருந்­து­வ­ரும் மயா­னங்­கள் அகற்­றப்­பட வேண்டும் என்­ப­தை­யும் எமது கட்சி வலி­யு­றுத்தி வரு­கின்­றது.
பின்­தங்­கிய கிரா­மிய சமூ­கச் சூழ­லில் வாழ்ந்து வரும் உழைக்­கும் மக்­க­ளின் அன்­றாட வாழ்­வுக்­கும், வளர்ச்­சிக்­கும் தடை­யாக இருந்து வரும் பழைமை, வழமை, பாரம் ப­ரி­யம் என்­ப­வை சமூக நீதி அடிப்­ப­டை­யில் ஒதுக்­கித் தள்­ள­ப்பட வேண்­டி­ய­வை­யா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
ஆசி­ரி­யர் குறிப்பு
1. சி.க.செந்­தி­வேல் குறிப்­பி­டு­வது போன்று, பொலி­ஸா­ருக்­கும் கலை­மதி கிரா­மத்­தைச் சேர்ந்த சில­ருக் கும் இடையே நடந்த மோத­லுக்கு புதிய ஜன­நா­யக மார்க்­சிச லெனி­னி­சக் கட்சி கார­ணம் என்று உத­யன் பத்­தி­ரிகை ஒரு­போ­தும் குறிப்­பி­ட­ வில்லை.
2. கலை­ம­திக் கிரா­மத்­தின் சுட­லைப் பிரச்­சினை வன்­மு­றை­யாக மாறி­வ­ரு­வ­தன் பின்­ன­ணி­யில், அந்­தக் கட்சி இருக்­கி­றது என்­கிற குற்­றச்­சாட் டையே பத்­தி­ரி­கைச் செய்தி வெளிப்­ப­டுத்­தி­யது. இங்கு வன்­முறை என்று குறிப்­பி­டப்­பட்­டது, சுட­லை­யைச் சுற்றி மதில் அமைத்­த­வர்­க­ளைத் தாக்­கி­யது, அவர்­க­ளுக்­குச் சாப்­பாடு எடுத்­துச் சென்­ற­வர்­க­ளைத் தாக்­கி­யது, வாழைத்  தோட்­டங்களில்  வாழை மரங்களை வெட்­டிச் சரித்­தது, இர­வில் வீடு மீது தாக்­கு­தல் நடத்­தி­யது, சிறுப்­பிட்டி கிரா­மங்­க­ளுக்­குள் இர­வில் புகுந்து அடா­வ­டித்­த­னங்­க­ளில் ஈடு­பட்­டது என்­ப­வற்­றை­யும் சேர்த்­துத்­தான்.
3. பொலி­ஸா­ருக்­கும் கலை­ம­தி­யைச் சேர்ந்­த­வர்­க­ளில் சில­ருக்­கும் இடை­யில் நடந்த பிரச்­சினை குறித்து இரு தரப்­பி­ன­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற் றஞ்­சாட்­டித் தெரி­வித்த கருத்­துக்­கள் அந்­தச் செய்­தி­யில் தெளி­வா­கக் குறிப் பி­டப்­பட்­டி­ருந்­தன. எந்­தக் கருத்­தும் திரித்­துக் கூறப்­ப­ட­வில்லை.
4. அதே­போன்று, வன்­மு­றை­க­ளின் பின்­ன­ணி­யில் இந்­தக் கட்சி இருக்­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டை மறுக்­கும் கட்­சித் தலை­வ­ரின் பதி­லும் அந்­தச் செய்­தி­யில் தெளி ­வா­கக் கூறப்­பட்­டி­ருந்­தது.
5. அந்­தக் குற்­றச்­சாட்­டுக் குறித்து கட் சித் தலை­வ­ரி­டம் அவ­ரது விளக்­கத்­தைக் கோரு­வ­தற்கு முன்­னர், அந்­தக் கட்­சி­யில் மிக முக்­கிய பத­வியை வகிக்­கும் நப­ரான செல்­வம் என்­ப­வரே அவ்­வப்­போது கூட்­டங்­களை நடத்தி நீதி­மன்­றத்­தின் ஆணையை உதா­சீ­னம் செய்து மயா­னத்­தின் மதிலை இடிப்­ப­தற்குத் தூண்­டு­த­லாக இருந்­தார் என்று உத­யன் அறிந்­தி­ருந்­தது.
சுட­லை­யின் சுற்­று­ம­தில் அமைத்­துக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்­குச் சாப்­பாடு எடுத்­துச் சென்­ற­வ­ரைத் தாக்­கி­னார் என்று ஏற்­க­னவே பொலி­ஸில் முறை­யி­டப்­பட்டு இருந்­த­தை­யும் உத­யன் அறிந்­தி­ருந்­தது. அந்த நப­ரைத் தேடி, அவ­ரை­யும் அவ­ரு­டன் சேர்ந்த வேறு சில­ரை­யும் கைது செய்­வ­தற்­கா­கச் சென்­ற­போதே பொலி­ஸா­ருக்­கும் கிரா­மத்­த­வர்­கள் சில­ருக்­கும் இடை­யில் பிரச் சினை உரு­வா­னது என்­ப­தை­யும் உத­யன் அறிந்தே இருந்­தது. இவற்­றின் அடிப்­ப­டை­யி­லேயே அந்­தக் குற்­றச்­சாட்டுக்கான பதிலை தலை­வர் சி.க.செந்­தி­வே­லி­டம் உத­யன் பத்­தி­ரிகை கேட்­டது.
6. சமூக விரோ­தச் செயல்­க­ளையோ, அடா­வ­டித்­தன ரவு­டித்­த­னங்­க­ளையோ, வாள்­வெட்­டுக் கலா­சா­ரத்­தையோ கொண்­டி­ருக்­காத சமூக அக்­க­றை­கொண்ட இளந்­தலை முறை­யி­ன­ரை­யும் மக்­க­ளை­யும் கொண்ட கட்­டுப்­பாடு உடைய கிரா­ம­மா­கவே கலை­மதி இருந்து வரு­கின்­றது, இதற்கு எமது கட்­சி­யின் வழி­காட்­ட­லும் பங்­க­ளிப்­பும் இருந்து வந்­துள்­ளது என்று தலை­வர் சி.க. செந்­தி­வேல் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அப்­ப­டி­யா­னால் வன்­மு­றைக் குற்­றச்­சாட்­டின் கீழ் தேடப்­ப­டும், தனது கட்­சி­யில் முக்­கிய பொறுப்பை வகிக்­கும் நப­ரைப் பொலி­ஸா­ரி­டம் விசா­ர­ணைக்­காக ஒப்­ப­டைக்­க அவர் தவ­றி­யி­ருப்­பது ஏன்?
7. அந்த நபர் இர­வில் கலை­மதி கிரா­ மத்­த­வர்­க­ளைத் திரட்டி கூட்­டம் நடத்தி ஏனைய மக்­களை அச்­சு­றுத்­தும் கருத்­துக்­க­ளை­கூறி “என்ன ஆனா­லும் விடு­வ­தில்லை, தலை­கள் உருண்­டா­லும் ஒரு கை பார்ப்­போம்’’ என்ற ரீதி­யில் ஆவே­ச­மா­கப் பேசி உசுப்­பேற்றி வரு­கி­றார் என்று கிரா­மத்­த­வர்­களே தெரி­விக்­கின்­ற­போ­தும் அதைத் தடுத்து நிறுத்தி அமை­தியை ஏற்­ப­டுத்த அவ­ரது கட்சி இது­வ­ரை­யில் எந்­த­வொரு முயற்­சி­யை­ யும் எடுக்­கா­தது ஏன்?
8. அவர் சொல்­வ­தைப் போலவே  கலை­ம­திக் கிரா­மம் கட்­டுக்­கோப்­பாக இருக்க கட்சி வழி­ந­டத்­து­கின்­றது என்­றால், தற்­போது அந்­தக் கிரா­மத்­த­வர்­க­ளில் சிலர் மீது குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­ப­டு­கின்­ற­போது, அந்த வன்­மு­றைக் கட்­டுப்­பாட்டை  வழிப்­ப­டுத்­து­வ­தும் கட்சி என்­று­ தானே பொருள்­கொண்­டா­க­வேண்­டும்!
9. இந்­தப் பிரச்­சினை பற்றி ஆசி­ரி­யர் தலை­யங்­கம் எழு­திய உத­யன் பத்­தி­ரிகையின் நோக்கம் கலை­மதி கிரா­மத்­தின் பிரச்­சி­னை­யைப் புறந்­தள்­ளு­வ­தல்ல. அது தீர்க்­கப்­ப­டு­வ­ தற்கு எடுக்­கப்­ப­டும் வழி­முறை பிழை­ யா­ன­தாக இருக்­கி­றது என்­ப­தைத் தெளி­வா­கச் சுட்­டிக்­காட்டி, இது அந்­தக் கிரா­மத்­திற்கு மட்­டு­மான பிரச்­சினை அல்ல, அத­னைப் பொது அடிப் படை­யில் அணுகி அதற்­கான பொதுத் தீர்வு, விதி­முறை  என்­பவை  உரு­வாக் கப்­ப­ட­வேண்­டும் என்றே  குறிப்­பிட்­டி­ ருந்­தது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது கட்சி, அதில் எங்கே பக்­கச் சார்­பை­யும் பழி­ வாங்­கும் நோக்­கத்­தை­யும் கண்­டது என்­ப­தும் புரி­ய­வில்லை.
10. இந்­தப் பிரச்­சி­னையை சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை ­யா­கக் காட்­டும் தொனியே சி.க. செந்­தி­வே­லின் அறிக்­கை­யி­லும் தொனிக்­கி­றது. ஆனால், இது சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னையே அல்ல, நாங்­க­ளும் அவர்­க­ளும் ஒரே சமூ­கத்­த­வர்­க­ளாக இருக் கும்­போது எப்­படி அது சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னையாக முடி­யும் என்று சிறுப்­பிட்டி மேற்கு மக்­கள் கோபப்­ப­டு­கி­றார்­கள்.
அப்­ப­டி­யி­ருக்­கும்­போது  இத­னைச்  சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­யாக ஊதிப் பெருப்­பித்­துக் காட்­டக் கட்சி  முனை­வ­தைப் பார்க்­கும்­போது பிரச்­சி­னை ­யின் பின்­ன­ணி­யில் இந்­தக் கட்சி இருக்­கி­றது என்­கிற குற்­றச்­சாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தில் தவறே◌ா பக்­கச் சார்போ பழி­வாங்­கும் நோக்­கமோ உத­யன் பத்­தி­ரி­கைக்கு இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.