இலங்கையின் தேசிய மட்டத்தில் நடந்த கோல் ஊன்றி பாய்தல் நிகழ்ச்சியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா எனும் வீராங்கனை மீண்டும் தனது புதிய சாதனையினைப் படைத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

ஏற்கனவே தன்னால் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை அவர் இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார். தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அதன்படி இன்று இடம்பெற்ற இந்த பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகளே பெற்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

இதற்கமைய, ஜே.அனித்தா 3.47 m உயரம்வரை பாய்ந்து முதலாம் இடத்தினையும், விமானப்படையைச் சேர்ந்த எஸ்.பீ.ரணசிங்க 3.20 m உயரம்வரை பாய்ந்து இரண்டாம் இடத்தினையும் சீ.ஹெரினா 3.00 m உயரம்வரை பாய்ந்து மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கோட்டையில் புதிய சாதனை படைத்த யாழ் தமிழச்சி!

இந்தப் போட்டிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கோட்டை எனச் சொல்லப்படும் அம்பாந்தோட்டையில் தியகம மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றதோடு கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் அனித்தா சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.