எசன் நுண்கலைக் கல்லூரி,அறநெறிப்பாடசாலை, மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இணைந்து வழங்கிய 32 ஆவது ஆண்டு வாணிவிழாக் கலைமாலை மிகச்சிறப்பாக 30.9.2017 அன்று நடைபெற்றது.மண்டபம் நிறைத்த மக்கள் எமது எதிர்காலச் சந்ததிகளின் கலை வெளிப்பாடுகளை கண்டு மகிழ்ந்தனர்.

தமிழருவி விருதுகளை ,பண்ணாகம் டொட்.கொம் இணையத் தள ஆசிரியர் திரு.கே.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஊடக விற்பன்னர் என்ற விருதையும்,

டோர்ட்முண்ட் எஸ்.டி.எஸ்.கலையக அதிபரும், இசை அமைப்பாளரும், அறிவிப்பாளருமான திரு.எஸ்.தேவராசா அவர்களுக்கு ஊடகத் தென்றல் என்ற தமிழருவி விருதையும் வழங்கப்பட்டது.

இதில் நுண்கலைக்கல்லூரி மணவ மாணவிகள் வழங்கிய கண்ணகி, மற்றும் நெல்லிக்கனி நாடகங்கள், மிகுந்த வரவேற்பைப் பெற்றன.கம் காமாட்சியம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. பாஸ்கரக்குருக்கள் மற்றும், கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும், ஸ்ரீ ஐீவகன் அவர்களும் பார்வையாளர்களும், நாடகத்தில் நடித்த அனைவரையும் சிறப்பாக வாழ்த்தினார்கள்..

இன் நிகழ்வில் மிருதங்கம்,வாய்ப்பாட்டு,வயலின், சுரத்தட்டு, நடனம், திரையிசை அபிநயம் என அனைத்து நிகழ்வுகளிலும் மாணவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.விழாச் சிறக்க உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.தகவல் படப்பிடிப்பு

நயினை விஐயன்
தமிழருவி யெர்மனி