ங்காள விரிகுடாவில் இந்த மாதம் இரண்டு புயல் மையங்கள் உருவாகப்போவதாகவும் இவை இந்தியாவின் தமிழ் நாட்டை ஊடறுத்து கரை கடக்கப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையாக விடுத்துள்ளது.

எதிர்வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் கால நிலையின்போது நடைபெறவுள்ள மாற்றங்கள் தொடர்பாக அந்த வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன்படி, இம்மாதம் 7 மற்றும் 12 ஆம் திகதிகளில் வங்காள விரிகுடாக்கடலில் 2 புயல்கள் உருவாக உள்ளன. இந்த நாட்களில் குறித்த புயல்கள் தென்னிந்தியாவின் தமிழ் நாடு கரையோர பகுதிகளை கடக்க உள்ளது.

புயல் கரையைக் கடக்கின்றபோது அதிகளவான சேதங்களினை தமிழ் நாடு எதிர் நோக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் தாக்கம் இலங்கையில் உணரப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுவதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments