ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அஜீத் நடித்து வரும் மங்காத்தா படத்தில் பஞ்ச் டயலாக் ஒன்றை வைத்துள்ளார் டைரக்டர் வெங்கட் பிரபு.

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத், திரிஷா நடிப்பில் மிகவேகமாக உருவாகி வரும் படம் „மங்காத்தா“. இப்படத்தை க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரித்து வருகிறார். படத்தில் கண்டிப்பாக பஞ்ச் டயலாக் இடம்பெற வேண்டும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிறைவேறாத என்ற நிலையில், படத்தில் பஞ்ச் டயலாக் ஒன்றை வைத்து ரசிகர்க‌ளின் ஏக்கத்தை பூர்த்தி செய்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் ஒரு டயலாக்காக „எல்லாருக்கும் கெட்டவன்னா, இவன் ரொம்ப கெட்டவன்“ என்று அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவது போன்று அமைத்துள்ளார் டைரக்டர்.

படத்தில் பஞ்ச் டயலாக் இடம்பெறுவது அஜீத் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. படம் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளில் வெளியாக இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.