பிரான்ஸின் செயின் நதியின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பாரிஸ் நகர மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரிஸில் செயின் நதியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 1.6 மீட்டரிலிருந்து 3.2 மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது அடுத்த 72 மணி நேரத்தில் மேலும் உயரும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். எனவே பாரிஸ் நகர மக்களுக்கு பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செயின் நதியின் ஊடாக படகு பயணம் செய்யக்கூடாது எனவும், நதியின் அருகில் குடியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் உடைமைகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நதியின் அருகில் உள்ள நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதைகள் ஆகியவை எதிர்வரும் நாட்களில் மூடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் காவல் தலைமையகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments