ஆண் மற்றும் பெண் சுவிஸ் மக்களைப் போன்று ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களுக்கும் வரி செலுத்த வேண்டிய கடமையுண்டு. இதை ஒருவர் வசிக்கும் உள்ளுராட்சிசபைக்கு செலுத்தும் வரி உள்ளுராட்சிசபை வரி என்றும்,மற்றும் மாநிலத்திற்கு செலுத்தும் வரி மாநில வரி என்றும், மத்திய அரசிற்குக் கொடுப்பது- இதை நேரடியான மத்திய அரசவரி என்றும் அழைப்பர்.

வரி பெறும் திட்டம் அதிகமான நபர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு வரி அறிவித்தலை நிரப்ப வேண்டியதாக ஒழுங்குபண்ணப்பட்டுள்ளது. இதில் நீங்கள், கடந்த வருடம் எவ்வளவு ஊதியம் பெற்றுள்ளீர்கள், எவ்வளவு சொத்துகள் உள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த வரி அறிவித்தலை உள்ளுர் வரித் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும். இது வரியின் அளவைக் கணிப்பதுடன் அதைப் பட்டியலிட்டுக் காட்டும்.

சுவிசில் குவெலென் வரி என ஒன்றுள்ளது. இது தொழில் வழங்குனரால் நேரடியாக வரி செலுத்தும் கடமையுள்ள நபரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும். அவர்கள் இந்த வரியை ஒவ்வொரு முறையும் ஊதியத்திலிருந்து கழித்து அதை வரித்திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிரந்தர வதிவிட அனுமதி c இல்லாத ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்கள், எவராவது நிரந்தர வதிவிட அனுமதி c உள்ளவரை அல்லது சுவிஸ் பிரஜாவுரிமை உள்ளவரைத் திருமணம் செய்திருந்தால் இது அவர்களுக்குப் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலங்களையும் பொறுத்து குவெலென் வரி வித்தியாசமான தொகையாக இருக்கும், இது வருடத்திற்கு வருடம் மாறுபடும்.

ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களிடமிருந்து இரு தடவைகள் வரி பெறுவதைத் தடுப்பதற்காக – சுவிசிலும் அவர்களின் தாய்நாட்டிலும்- சுவிஸ் 50 க்கு மேலான நாடுகளுடன் இரட்டை வரி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் வரி ஏய்ப்பு விடயங்களின்போது ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments