சிறுப்பிட்டி மண்ணில் உதித்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் உருவச்சிலையினை சிறுப்பிட்டி மண்ணில் திறந்து வைத்த  செய்தி மகிழ்வைத்தருகின்றது

இதை முன்னெடுத்த இளையோருக்கும் அதற்கான ஆலோசனைய் வழங்கியோருக்கும் வாழ்த்துக்கள் நாம் இந்த சிலைக்கான முன்நெடுப்பை எடுத்தபோது அதற்கான எமது சிறுப்பிட்டிஉகத்தமிழர் ஒன்றியத்தின் சிறுப்பிட்டி செயல்பாட்டாளர் ஒருவர் அதற்கான ஒத்துழைப்பை வழங்காமை எமக்கு அன்று மிக வருத்தத்தைத்தந்தது,

புலத்தில் இருந்து இதன் செயல்பாட்டுக்குழு சிறுப்பிட்டிக்கு வந்து அதற்கான செல்பாடுகளை முன்னெடுக்க வந்த போதும் அதற்கும் தடைகள் ஏற்படுத்தியதும் எமக்து மிகவருத்தத்தைத்தந்தது மட்டுமல்ல எம்மை அந்த சேவையை செய்ய விடவில்லை என்பதே உண்மை,

அதுமட்டுமல்ல சி.வை.தாமோதரம்பிள்ளைக்கான சிலை சிறுப்பிட்டி மத்தியில் தான் அமைய வேண்டும் என்ற கருத்தையும் சிறுப்பிட்டி உலகத்திழர் ஒன்றியக்குழு முன்‌வைத்திருந்தது என்பதும் உண்மை ,

அத்தோடு நாம் சிறுப்பிடிஉகத்தமிழர் ஒன்றியம் என பெயர் வைத்ததன் நோக்கே எமது ஊரின் பொது வேலைத்திட்டங்களில் அனைவரும் இணைந்து நிற்க வேண்டும் என்பதே

அதுபோல் மூன்று பெரியார்களை கௌரவித்தது மூன்று சனசமூக நிலையங்களுக்கான கணனிகள் வழங்கியிருந்தமை எனச் சொல்லலாம் நாம் செயலாற்றிய பல நிகழ்வை எமது ஊர் நன்மை கருதியது என்பதே
உண்மை

இதில் சில தடங்கலுக்கு உள்ள அந்த காரணத்துக்கானவர்பற்றி நாங்கள் ஊரின் நன்மை கருதியும் ஊடக தர்மம்கருதியும் இதில் சில விடையங்களை எழுதாமலே விடுகிறோம் ஆனாலும்
சிறுப்பிட்டி மண்ணில் உதித்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் சிலைக்கு உழைத்த யாராக இருந்தாலும் வாழ்த்துக்கள்


எமது மண்ணுக்கு பெருமை உள்ள அந்த ஆசான் சி.வை. அவர்கள் ‌அவர் புகழ்  எமது பள்ளிப்பாடபுத்தகம் வரை  உள்ளதென்பது எமது ஊர்மண்ணுக்கு பெருமை  அந்தப்பெருமைக்குரிய பெரியவருக்கு சிலைவடிக்க வேறுபாடு இன்று எமது ஊர் மக்கள் அர்ப்பணிப்பும் புலம்பெயர்வாழ் கொடைவள்ளல்கள் துணையுடனும் சி.வை.தாமோதரம்பிள்ளையின் சிலைதிறப்புக்காய் பணி புரிந்தஅனைவருக்கும்சிறுப்பிடிஉகத்தமிழர் ஒன்றிய நிர்வாகம் நன்றி கூறி நிற்கின்றது  மட்டுமல்ல ஊர் இணைவு எமது நோக்கு இளைஞர் இணைவில் உங்கள் இந்த  ஓராண்டு சாதனையானது எமது மொத்தச்சிறுப்பிட்டி மண்ணுக்கும் பொருமை என்பது உண்மை

உழைப்பில்  வலுவிலும்
உன்னத இளைஞர்கள் இணைவிலும்
ஓங்கிய சி.வை.தாமோதரம்பிள்ளை சிலைக்கு
வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

ஊரை கூட்டி ஒன்றாய் இணைத்து
பாருக்கு படைத்தீர் எமது
சிறுவையூர் சிங்காரத்தமிழர்
சி.வை. சிலை தனைவைத்து
சிறந்த நற்பணிக்கு வாழ்த்துக்கள்

வளம் பெருகி எமது  ஊர்
வல்ல பெருமை உலகுற
வல்லமையாய் உழைத்தோர்க்கும்
வாழ்த்துக்கள் கூறுகின்றோம்
ஊர் கூடிய கை ஓசை
உங்களை வாழ்த்தி நிற்கும் -ஆனாலும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் வாழ்தும்
இணையட்டும் உமக்காக