ஹூவாய் P20 ஸ்மார்ட்போன் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவாய் P20 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவு மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மூன்று கேமராக்கள் வழங்கும் பட்சத்தில் மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஹூவாய் பெறும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் P11 அல்லது P20 என அழைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாவகே உள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய P-சீரிஸ் ஸ்மார்ட்போனில் 40 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு, 5X ஹைப்ரிட் சூம், 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இவற்றை லெய்கா தயாரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட் 10 ப்ரோவை விட சிறியதாக இருக்கும் என்றும் இதில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை இயக்கும் கிரின் 970 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் முந்தைய ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போனினை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் பாயின்ட் கிளவுட் டெப்த் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வகை கேமரா ஆப்பிளின் ட்ரூ டெப்த் கேமரா போன்றதாகும்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments