சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு 06.03.2018 ஆகிய இன்று பிறந்தநாள். இவரை இந்த சிறுப்பிட்டி இணைய உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.

இசை ,கவி, பாடகர்,நடிகன் மட்டும் அல்லாது பழகும் பண்பும் பொது நலனில் முன்வந்து செயல்படும் பாங்கு நிஜத்தில் நடிக்கதெரியாத இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இந்த இணையம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த இனிய நாளில் பதிவு செய்கின்றது .

எமது கிராமத்தின் ஒற்றுமைக்கும் நல் முன்னெடுப்புக்களுக்கும் பக்கபலமாக இருப்பதுடன் செயற்பாடுகளுடன் இணைந்திருக்கும் உங்கள் கலைக்குடும்பதினருக்கும் எமது தாள் படிந்த நன்றிகள் சிறுப்பிட்டி இணையம், சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் மற்றும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments