இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்தஅரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்தவலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதைஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.