வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஜந்து வயது மகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் ( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது.
காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனது தொழிலுக்குச் செல்கின்ற போது தனது மகளையும் ( சுகந்தன் துசாந்தினி – வயது ஜந்து) முள்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவ்வாறே கடந்த புதன் கிழமை காலை வீட்டிருந்து வானில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை முன்பள்ளியில் மகளை இறக்கிவிட்டுவிட்டு வாகனத்தை திருப்பிய போது வழமைக்கு மாறாக மகள் வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக முன்பள்ளிக்கு நுழைவதற்கு எத்தனித்த போது வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.
உடனடியாக தந்தை மகளை செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து அவசரமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் அதி தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிசை அளிக்கப்பட்டதோடு அறுவை சிகிசையும் மேற்கொள்ளப்பட்டது இருந்தும் வைத்தியர்களால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவே சிறுமி நேற்று (வியாழக்கிழமை) மதியம் உயிரிழந்துள்ளார்.
இறந்த சிறுமி இக்குடும்பத்தின் ஒரேயொரு மகள் என்பது குறிப்பிடத்தக்கது
குறித்த சம்பவம் அந்த பிரதேசத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.