பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.
டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments