இலங்கையில் மரணமடைந்த பிரித்தானியா ரக்பி விளையாட்டு வீரர்கள் இருவரும், இறப்பதற்கு முன் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் துர்ஹாம் நகர ரக்பி கிளப் சார்பில் 22 வீரர்கள் கடந்த மே மாதம் 9ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இவர்களில் Thomas Howard (25) மற்றும் Thomas Baty (26) என்ற இரு வீரர்களும் அடங்குவர்.
இந்நிலையில் கடந்த 13ம் திகதி கொழும்புவில் போட்டியில் பங்கேற்று விட்டு, இருவரும் இரவு விடுதிக்கு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை ஹொட்டலுக்கு வந்தவுடன் மூச்சுத்திணறலால் அவதியுள்ள நிலையில், உடனடியாக Nawaloka மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

DCRFC
அங்கு தீவிரமான சிகிச்சைக்கு பின்னரும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர், இதுதொடர்பான விசாரணையை பொலிசார் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது கொழும்பு நீதிமன்றத்தில், மரணிப்பதற்கு முன்னர் இருவரும் போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விரிவான அறிக்கையை வருகிற ஆகஸ்ட் 3ம் திகதி சமர்பிக்கும்படி நீதிபதி Lanka Jayaratna உத்தரவிட்டுள்ளார்.