கொலை குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறையிலிருந்த பெண் ஒருவர், நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டு இரத்தினபுரி, கொடகெதன பகுதியில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண் சிறையிலிருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராய்ச்சி இந்த தீரப்பினை வழங்கியுள்ளார்.
2012ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி கொடகெதன பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நயனா நில்மினி எனும் தாயும் அவருடைய 17 வயதுடைய மகளான காவிந்தியா சதுரங்கி ஆகியோரு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், லொகுகம்ஹேவாகே தர்சன (ராஜூ) மற்றும் அவருடைய மனைவி சாந்தனீ குமாரி (பட்டி) ஆகிய இருவர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் சாந்தனீ குமாரி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றம் தொடர்பில் உரிய சாட்சிகளை முன்வைக்காத காரணத்தால் பிரதிவாதியை நீதிபதி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments