தமிழ்மக்களும் அதிகமாக வசிக்கும் பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சார்சலில் உள்ள வணிக அங்காடி தொகுதி ஒன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இந்த வாகனம் கண்டுபிடிக்கபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் சந்தேகத்துக்கு இடமான ரெனோ லகுனா ரகத்தை சேர்ந்த வானம் ஒன்றை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து சோதனையிட முனைந்தனர்.

ஆயினும் அந்தவாகனம் அவர்களிடமிருந்து தப்பித்து வேகமாக சார்சல் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. அந்த வாகனத்தில் சாரதியுடன் வேறு ஒரு நபரும் இருந்திருக்கிறார்.

இதன்பின்னர் தப்பியோடிய வாகனத்தை தேடி தீவிர தேடுதலை நடத்திய காவற்துறையினர் அதனை சார்சலில் உள்ள வணிக அங்காடிதொகுதி வாகனத்தரிப்பிடத்தில் கண்டுபிடித்தனர்.

மேற்படி வாகனத்தை சோதனையிட்டபோது அந்தவாகனத்தில் வெடிமருந்து கொள்கலன்கள் இருந்தன

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக வணிக அங்காடி தொகுதியில் இருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பியோடிய இருவரை தேடும் வேட்டை தற்போது இடம்பெற்றுவருகின்ற