மனைவியை தாக்கி கணவன் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

பொலன்நறுவை நிஷ்சங்கமல்லபுர பிரதேசத்தில் வசித்து வந்த 36 வயதான ஆசிரியை சுமார் ஒரு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், காணாமல் போன ஆசிரியையின் கணவரிடம் விசாரணைகளை நடத்தினர்.

அப்போது தனது மனைவியை தானே கொலை செய்ததாக கணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஒரு பிள்ளையின் தாயான ஆசிரியைக்கும், அவரது கணவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது கணவன் மேற்கொண்ட தாக்குதலில் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஆசிரியை அவரது கணவர் காரில் ஏற்றிச் சென்று மொரகஹாகந்த நீர்தேக்கத்திற்கு அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments