அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லதம்பி வசந்தகுமார் (வயது 45) என்ற 4 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நவுறு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்து, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இலங்கை தமிழர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால், அவர் மூளைச்சாவடைந்துள்ளார்.
சிகிச்சைகள் பலனளிக்காது என மருத்துவர்கள் முடிவெடுத்த பின் அவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5:45 மணியளவில் நல்லதம்பி வசந்தகுமார் என்ற இலங்கைத் தமிழர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments