டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும் . இது வட அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் நகரில் உலகின் தலை சிறந்த கப்பல் கட்டுமான பொறியியலாளர்களால் கட்டப்பட்டது . 1912 ல் முதன் முதலாக சேவைக்கு விடப்பட்ட போது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக்கப்பல் ஆகும் . இதன் முதற் பயணம் 1912 ஏப்ரல் மாதம் 10 ம் திகதி புதன்கிழமை எட்வர்ட் ஸ்மித் தலைமையில் இங்கிலாந்து நாட்டின் சவ்தாம்டன் துறைமுகத்தில் இருந்து . ஆரம்பமானது . பின்பு ஆங்கில கால்வாயை தாண்டியதும் பிரான்ஸ் நாட்டின் சேர்ப்பூக் நகரில் நிறுத்தப்பட்டு சில பயணிகள் ஏற்றப்பட்டனர் . அதன் பின் மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து குயின்ஸ்வூண் என்னும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு 2240 பயணிகளுடன் நியுயார்க் நகரத்தை நோக்கி பயணித்தது அதன் விதி எப்படி இருந்ததோ தெரியவில்லை 1912 ஏப்ரல் மாதம் 12ம் திகதி இரவு 11 மணி 40நிமிடத்தில் பெரும் பனிப்பாறையுடன் மோதியது . அக்கணமே கப்பலின் இயந்திரம் நிறுத்தி ஆபத்து சமிக்ஞைகள் அயலிலுள்ள கப்பல்களுக்கு அனுப்பினாலும் அவைகள் வந்தடைவதற்கு நேரம் போதவில்லை மறுநாள் அதிகாலை சரியாக 2 : 20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது மொத்தம்
இருந்த 2223 பேரில் ஆக 706 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டனர் . மீதி 1517 பேர் உயிரிழந்தனர் அதிகமானவர்கள் குளிர் தாங்காமையால் இறந்தனர் ( – 2 degree Celsius ) இதில் மூன்று வகுப்புகள் இருந்தது முதல்வகுப்பில் செல்வந்தர்கள் இருந்தனர் . மூன்றாம் வகுப்பில் இருந்தவர் களில் அநேகமானோர் அமெரிக்காவில் குடியேற சென்றவர்கள் ஆவர் . ஆனாலும் இந்த கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட ‚ தொழிநுட்பத்தை கொண்டு கட்டப்பட்டது ! அது மூழ்கவே இயலாது என்று பெயர் சொல்லி நின்ற பொறியியலாளர்களுக்கு இந்த நிகழ்வு பேர் அதிர்ச்சியை கொடுத்தது . இறுதியாக சேதமடைந்த பகுதிகள் – 1985 செப்டம்பர் மாதம் ராபர்ட் பாலர்ட் தலைமையில் குழு ஒன்று கண்டுபிடித்தது டைட்டானிக் தற்போது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12000 அடி ஆழத்தில் இருக்கிறது . இவ்வாழத்தில் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 27000 கிலோ கிராம் ஆக உள்ளது . தற்போதைய ஆய்வாளர்கள் இதன் பாகங்கள் நுண்ணங்கிளால் அழிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்கள் .