நீர்வேலி :

சமூகசேவகி வேதவல்லி கந்தையா அவர்களின்
சிலை சிறப்பு விழா

10.2.2019 ஞாயிற்றுக்கிழமை

பிற்பகல் 1 மணிக்கு நீர்வேலி கந்தசுவாமி கோவில் வடக்கு வீதி, வேதவல்லி கந்தையா ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் இடம்பெற்றது..

இச் சிலையினை முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் அவர்கள் திறந்து வைத்ததுடன், அமரர் வேதவல்லி கந்தையா அவர்களின் மகனான கந்தையா சுகுமாரன் அவர்களும் அவரது பாரியார் மீனலோசினி சுகுமாரன் அவர்களும் மலர்மாலை அணிவித்தனர்.

 

இந்நிகழ்வில் வரவேற்பு நடனம் விருந்தினர்களின் உரைகள் , நடன கலைநிகழ்வுகளும், இடம்பெற்றதுடன் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

இச்சிலையினை கலைஞானி திரு.து.குமரநாதன் (BFA) அவர்களால் வடிவமைக்கப்பட்டது.