வேலையற்ற பட்டதாரிகளுக்கு இம்முறை வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.இதற்காக 20000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்னவென்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த கேள்விக்கான பதிலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறிய அவர்,“

அமைச்சரவைப் பத்திர அனுமதியின்கீழ் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஒக்டோபர் 26ஆம் நாள் ஏற்பட்ட குழப்பங்களால் அந்த நடவடிக்கை தடைப்பட்டது. ஆனாலும் இம்முறை பாதீட்டில் இதுதொடர்பான கவனம் செலுத்தப்படும்“ என்றார்.