யா.சிறுப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி 14.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு பாடசாலை முதல்வர் திரு. த.யுகேஸ் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரதிக்கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்,மாகாணக் கல்வித்திணைக்களம்,வடமாகாணம்) இ.ஐெனால்ட் அன்ரனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் விருந்தினர்களாக *திரு.ப.சசிகுமார்(உதவிக் கல்விப்பணிப்பாளர்,ஆரம்பக்கல்வி,யாழ்ப்பாணம்) ,
*திரு.செ.சிவலிங்கராயா(ஓய்வுநிலை அதிபர் ,யா/சிறுப்பிட்டி அ.த.க பாடசாலை)
*திரு. செ.தவநாயகம்(பிரதேசசபை உறுப்பினர்,வலிகிழக்கு பிரதேசசபை),
*திருமதி. வி.துஸ்யந்தி (அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறுப்பிட்டி மேற்கு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர் பெற்றோர்கள் என அனைவரும் விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்