• மேஷம்

  மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்
  கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதி
  காரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். மாறுபட்ட அணுமுறையால் சாதிக்கும் நாள்.

 • மிதுனம்

  மிதுனம்: புதிய  முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகா ரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

 • கடகம்

  கடகம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். நட்பு வட்டம்விரியும். பழைய கடனைத்தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால்அலைச்சல் ஏற்படும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

 • சிம்மம்

  சிம்மம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

 • கன்னி

  கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். ஆடை, அணிகலன் சேரும். நேர்மறை சிந்தனைப் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.  புதிய பாதை தெரியும் நாள்.

 • துலாம்

  துலாம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலநேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவதுநல்லது. வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.  அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

 • தனுசு

  தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

 • மகரம்

  மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறை வேறும். உறவினர்,நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள்வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

 • கும்பம்

  கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

 • மீனம்

  மீனம்: சந்திராஷ்டமம்தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.