• மேஷம்

  மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீகள். உற்சாகமான நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்வார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

 • மிதுனம்

  மிதுனம்: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடை, ஆபரணம்சேரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 • கடகம்

  கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

 • சிம்மம்

  சிம்மம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

 • கன்னி

  கன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்கள்உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர் ஒத்துழைப்பார். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

 • துலாம்

  துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

 • தனுசு

  தனுசு:  ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால்
  பகை உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

 • மகரம்

  மகரம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும்.பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

 • கும்பம்

  கும்பம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.மதிப்புக்கூடும் நாள்.

 • மீனம்

  மீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படு வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சாதிக்கும் நாள்.