• மேஷம்

  மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரச்னைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பான்மை தலைத் தூக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது மனசை வாட்டும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 • மிதுனம்

  மிதுனம்: வீண் சந்தேகமும், மறைமுக விமர்சனங்களும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். லேசாக தலை வலிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபா
  ரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகா ரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைக ளை தாண்டி முன்னேறும் நாள்.

 • கடகம்

  கடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங் களைத் தேடி வருவார். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இனிமையான நாள்.

 • சிம்மம்

  சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்-. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

 • கன்னி

  கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபா ரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாள்.

 • துலாம்

  துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை  பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப்போக வேண்டிய நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். நன்மை கிட்டும் நாள்.

 • தனுசு

  தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

 • மகரம்

  மகரம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவ ழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப் பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

 • கும்பம்

  கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபா ரத்தில் பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

 • மீனம்

  மீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து சிக்கலில் சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.