தே . அ . அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள் ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார் .

நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை
விநியோகிக்கப்படவுள்ளன .பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும் .இதேவேளை , கடவுச்சீட்டை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு , குடியகல்வு திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது .