வட மாகாணத்தை அச்சுறுத்தி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடும் வெப்பமான காலநிலையில் வெளியில் சென்றவர் மயங்கி வீழ்ந்துள்ளார். எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்திருந்தது.

இவ்வாறான நெருக்கடி நிலையை சமாளிக்க அதிகளவான நீர் அருந்துமாறும், மூன்று வேளையும் நீராடுமாறும் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.