போர்க்­குற்­றம் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­வும் கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கம் மேற்­கொள்­ளும் பேரணி இன்று (16.03.2019) இடம்­பெ­ற­வுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அமர்வு தற்­போது இடம்­பெற்­று­வ­ரும் நிலை­யில், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் இந்­தப் பெரும் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

போர்க்­குற்­றம் தொடர்­பில் இலங்­கைக்கு எதி­ரான பன்­னாட்டு விசா­ரணை அவ­சி­யம், இலங்கை அர­சுக்கு தொடர்ந்­தும் கால அவ­கா­சத்­தையோ அல்­லது கால நீட்­டிப்­புக்­க­ளையோ ஐ.நா. வழங்­கக்­கூ­டாது என்று வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் இந்­தப் பேர­ணிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து ஆரம்­பிக்­கும் இந்­தப் பேரணி முற்­ற­வெளி வரை­செல்­லும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் அர­சுக் கட்சி, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ் மக்­கள் முன்­னணி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி. சமத்­து­வம் மற்­றும் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, ஈ.பி.டி.பி. உள்­ளிட்ட பல்­வேறு கட்­சி­கள் மற்­றும் அமைப்­புக்­கள் இந்­தப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

‘இலங்கை அர­சின் இணை அனு­ச­ர­ணை­யு­டன் முன்­வைக்­கப்­பட்ட வெளி­நாட்டு நிபு­ணர்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் கூடிய போர்க்­குற்ற விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­க­வல்­ல­தான நீதி­மன்­றப் பொறி­மு­றை­யொன்று இன்­ன­மும் அமைக்­கப்­ப­ட­வில்லை. மாறாக போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பான செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்கு இலங்கை அரசு கால அவ­கா­சம் கேட்­கின்ற நிலை­யும், மனித உரி­மை­கள் பேர­வை­யா­னது அதற்­கான அவ­கா­சத்தை வழங்­கு­கின்ற நிலை­மை­யுமே காணப்­ப­டு­கி­றது. இந்த நிலை­யில்­தான் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் குரல்­களை வலுப்­ப­டுத்தி உட­ன­டித் தீர்­வை­யும் நீதி­யை­யும் நோக்கி அவர்­களை நெறிப்­ப­டுத்­தும் வகை­யிலே இந்­தப்­பே­ரணி நடத்­தப்­ப­டு­கி­றது’ என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக ஆசி­ரி­யர்­கள் சங்­கத் தலை­வர் முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.