வடக்­கி­லுள்ள வீர வீராங் கனை­கள் சாத­னை­யா­ளர்­க­ளாக மாறு­வ­தற்கு, சுக­தாச உள்­ள­ரங்­கைப் போன்று வெளிச்­ச­மூட்­டிய விளை­யாட்­ட­ரங்கு ஆறு மாதங்­க­ளுக்குள் அமைத்­துத் தரப்­ப­டும். இவ்­வாறு விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் ஹரின் பெர்­னாண்டோ கிளி­நொச்­சி­யில் வைத்து நேற்­றுத் தெரி­வித்­தார்.

கிளி­நொச்­சி­யில் அமைக்­கப்­பட்ட வடக்கு மாகாண விளை­யாட்­டுக்­கள் கட்­ட­டத் தொகுதி மக்­கள் பாவ­னைக்கு நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது. இந்த நிகழ்வு, விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் ஹரின் பெர்­னாண்­டோ­வின் பங்­கேற்­பு­டன் நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்­ப­மா­னது.

கிளி­நொச்சி சித்தி விநா­ய­கர் ஆல­யத்­தி­லி­ருந்து விருந்­தி­னர்­கள் அழைத்து வரப்­பட்­ட­னர். விளை­யாட்­டுத் தொகு­திக்­கான கட்­ட­டத்தை வீராங்­கனை சிவ­லிங்­கம் தர்­சினி திறந்து வைத்­தார். கட்­ட­டத் தொகு­தி­யில் அமைந்­துள்ள நீச்­சல் தடா­கத்தை அமைச்­சர் குழு­வி­னர் திறந்து வைத்­த­னர்.

கிரிக்­கெட் மைதா­னத்­துக்­கான அடிக்­கல் அமைச்­ச­ரால் நடப்­பட்­டது. உள்­ளக விளை­யாட்­ட­ரங்கை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா திறந்து வைத்தார்.

இந்த மைதா­னத்­துக்கு அடிக்­கல் நட்­ட­வர்­கள், திறப்பு விழா­வுக்கு வந்­தி­ருந்­தால் இந்­தப் பிர­தே­சமே அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கும்’ என்­றார் அமைச்­சர் ஹரின்.

நிகழ்­வில் உரை­யாற்­றிய சிவ­லிங்­கம் தர்­சினி, போர்க் காலத்­தில் பாட­சா­லை­யில் இருந்து என்­னால் சாதிக்க முடி­யா­தி­ருந்­தது. இங்­கி­ருந்து தென்­னி­லங்­கைக்­குச் செல்­வ­தென்­பதே பய­மாக இருந்­தது. பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து விளை­யாட்­டுத் துறை­யில் சாதிக்க முடிந்­தது. கொழும்­பில் சென்று தங்­கி­யி­ருந்து பயிற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றேன்.

வடக்கு வீரர்­கள் இங்கே பயிற்­சி­க­ளைப் பெற்று கொழும்­பில் சென்று வெளிச்­ச­மூட்­டிய உள்­ள­ரங்­கு­க­ளில் விளை­யாட முடி­யா­மல் சிர­மப்­பட்­டி­ருக்­கின்­றார்­கள். அவர்­க­ளுக்கு இத்தகைய மைதா­னம் வரப்­பி­ர­சா­தம், என்­றார்.

பன்­னாட்­டுத் தரத்­தி­லான மேற்­படி விளை­யாட்­ட­ரங்­குக்கு 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வால் அடிக்­கல் நடப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.